மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உலக நாயகன் கமல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாயகன் கமல் சாதாரண மருத்துவ பரிசோதனைகளுக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி:

தமிழ் சினிமாவில், முன்னணி நாயகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். தற்போது இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதனை அடுத்து, பிக்பாஸ் ஷூட்டிங்குக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது இந்தியன் 2 படத்தில் இவர் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வந்தது.

இது ஒருபுறமிருக்க, இன்று மீண்டும் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி தீயாய் பரவியது. இதையடுத்து அவர் வழக்கமான மருத்துவ சோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அது முடிந்ததும் அன்று மாலை வீடு திரும்புவார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதைக் கேட்ட ரசிகர்கள் சற்று மன ஆறுதல் அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here