அம்மாவின் அழகை அப்படியே உரித்தெடுத்த குஷ்புவின் மகள் – வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!

0

குஷ்புவின் இரண்டாவது மகளான அனந்திதா தீவிரமாக உடல் எடையை குறைத்த பின்பு தந்தையுடன் இணைந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் குஸ்புவின் மகளா என குழம்பி வருகின்றனர்.

குஷ்புவின் மகள்:

90ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் சின்னத்தம்பி என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் புகுந்தார். இவர் தமிழில் மட்டும் அல்லாமல் கன்னடம், மலையாளம் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இயக்குனர் சுந்தர். சியை 2000ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். அதற்கு பிறகு தனது கணவருடன் இணைந்து ”அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.

குஷ்புவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது குஷ்பு உடல் எடையை தீவிரமாக குறைத்து 90ஸ் கால குஷ்புவாகவே மாறியுள்ளார். இதே போல் இவரது மகள்களும் உடல் எடையை குறைத்துள்ளனர். உடல் எடையை குறைத்த பின்பு சுந்தர் சி யுடன் இணைத்து இவரது இரண்டாவது மகள் அனந்திதா ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு பலரும் நடிகை குஷ்புவின் மகளா இது.. அச்சு அசல் அவரை போலவே இருக்காரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here