ஸ்புட்னிக் – வி தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிரபலம் …!போட்டோவை பகிர்ந்து விழிப்புணர்வு!!!

0

உலகம் முழுவதும் கொரோனா என்னும் பெருந்தொற்று பரவி மக்களை நிலைகுலைய வைத்து  உள்ளது. இந்நிலையில் இதற்கு பேராயுதமாக கருதுவது தடுப்பூசிகள் மட்டுமே. அந்த வகையில் பிரபலங்கள் பலரும் தடுப்பூசி செலுத்தி கொண்டு மக்களுக்கு அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ஜெய் அவர்களும் முதல் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை செலுத்திக்கொண்டு அந்த புகைப்படத்தை ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

நடிகர் விஜய் அவர்களின் பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக அறிமுகமானவர் நடிகர் ஜெய் அவர்கள். அதை தொடர்ந்து பல படங்களில் பல வித்தியாசமான கதைகளில் நடித்து தனது நடிப்பு திறமையை உலகிற்கு வெளிப்படுத்தியவர். அவர் நடிப்பில் உருவான சுப்ரமணியபுரம், கோவா, ராஜா ராணி உட்பட பல படங்களில்  நடித்து ஒரு முன்னணி நடிகராக மாறியுள்ளார்.

தற்போது உள்ள கொரோனா சூழலில் மக்கள் தங்களை காத்து கொள்ள தடுப்பூசியை நாடி வருகின்றனர். இருப்பினும் இது பற்றிய வதந்திகள் ஒரு சில மக்கள் மத்தியில் நிலவதான் செய்கிறது. இதனை போக்க பல அரசியல் பிரபலங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் தடுப்பூசி போட்டுகொண்டு அந்த புகைப்படங்களை ஷேர் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ஜெய் அவர்களும்  ஸ்புட்னிக் – வி  தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி கொண்டு அந்த புகைப்படத்தை பகிர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என்ற 2 தடுப்பூசிகள் மட்டுமே புழக்கத்தில் இருந்த நிலையில் தற்போது இந்த  ஸ்புட்னிக் – வி எனப்படும் மூன்றாவது தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here