விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி – நடிகர் ஹரிஷ் கல்யாண் பாராட்டு!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி குறித்து தற்போது நடிகர் ஹாரிஷ் கல்யாண் தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அனைவர் மத்தியில் பேசப்படும் ஒரு நிகழ்ச்சியாக “குக் வித் கோமாளி” உள்ளது.

“குக் வித் கோமாளி” நிகழ்ச்சி:

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல விதமான புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான், “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி. இது ஒரு புது வகையான சமையல் நிகழ்ச்சியாகும். முதல் பாகம் நன்றாக மக்கள் மத்தியில் பேசப்பட்டதால், இதன் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இது ஒரு சமையல் போட்டி ஆகும். ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு வித விதமான டாஸ்குகள் கொடுக்கப்படும்.

ரெட்மி நோட் 9T சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் – விலை மற்றும் அம்சங்கள் இதோ!!

இதில் நன்றாக சமைக்க தெரிந்த ஒருவர் இருப்பார். ஒருவர் கோமாளியாக இருப்பார். இந்த போட்டியில் தற்போது நடிகை ஷகிலா, மதுரை முத்து, பாபா பாஸ்கர், நடிகை தீபா, ஷிவாங்கி, நடிகர் அஸ்வின் குமார் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். கடந்த வாரம் நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனால் அந்த நிகழ்ச்சியில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வந்தது.

ஹாரிஷ் கல்யாண் கருத்து:

இந்த நிகழ்ச்சியினை மக்கள் தற்போது விரும்பி பார்த்து வருகின்றனர். நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அன்று அனைவரும் போட்டியாளர்களின் முகபாவனைகளை தங்களுக்கு ஏற்ப மாற்றி மீம்ஸ் ஆக சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இப்படியான நிலையில் தற்போது நடிகர் ஹாரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நிகழ்ச்சி குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் கூறிருப்பதாவது, “விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி தற்போதைய ஸ்ட்ரெஸ் பாஸ்டராக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் நன்றாக விளையாடுகின்றனர். இவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். இதனை செயல்படுத்தும் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here