ரெட்மி நோட் 9T சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் – விலை மற்றும் அம்சங்கள் இதோ!!

0

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களான ரெட்மி நோட் 9T மற்றும் ரெட்மி 9T ஸ்மார்ட்போன் சமீபத்தில் உலகளவில் வெளியானது. தற்போது இந்த ஸ்மார்ட் போன்களுக்கான அம்சங்கள் மற்றும் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சியோமி:

சமீபத்தில் ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களான ரெட்மி நோட் 9T மற்றும் ரெட்மி 9T போன்களை உலகளவில் அறிமுகப்படுத்தியது. ரெட்மி நோட் 9T ஸ்மார்ட்போனானது ரெட்மி நோட் 9 5ஜி மாடலை மாற்றியமைக்கப்பட்ட மாடலாகும். மேலும் ரெட்மி 9T என்னும் போன் ரெட்மி நோட் 9 4 ஜி ஸ்மார்ட்போமின் மறுபெயரிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 9T அம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஸ் அடிப்படையில் இயங்குகிறது. இது 6.53 இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி டிஸ்பிலேவை கொண்டது.

அதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 1.79 லென்ஸ்) + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் (எஃப் / 2.4 லென்ஸ்) + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவைகள் உள்ளன. மேலும் இதன் செல்பி கேமராவை பொறுத்தவரை 13 மெகாபிக்சலை கொண்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் 64 மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியை பெற்றுள்ளது. மேலும் இதன் பேட்டரி 5000எம்ஏஎச் மற்றும் 18w வேகமான சார்ஜிங் வசதியை பெற்றுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஸ்மார்ட்போன் விலை: 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.20,500க்கு, மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது சுமார் ரூ.24,100 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

ரெட்மி 9T ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஸ் அடிப்படையில் இயங்குகிறது. இது 6.53 இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி டிஸ்பிலேவை கொண்டது. இதில் அதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 1.79 லென்ஸ்) +8 மெகாபிக்சல் டெப்த் சென்சார் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் (எஃப் / 2.4 லென்ஸ்) + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவைகள் உள்ளன. மேலும் இதன் செல்பி கேமெராவை பொறுத்தவரை 8 மெகாபிக்சலை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 64 மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியை பெற்றுள்ளது. மேலும் இதன் பேட்டரி 6000எம்ஏஎச் மற்றும் 18w வேகமான சார்ஜிங் வசதியை பெற்றுள்ளது.

Ticket To Finale கைப்பற்றிய சோம் – இந்த வாரம் வெளியேற போகும் நபர் யார் தெரியுமா??

 

ஸ்மார்ட்போன் விலை: 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ14,300க்கு மற்றும் அதன் 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது சுமார் ரூ.17,100க்கும் மேலும் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது சுமார் ரூ.17,900க்கும் விற்பனை செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here