என்னோட வளர்ச்சிக்கு காரணம் ரஜினி இல்லை! இவங்க தான் – காட்டமாக பதிலளித்த தனுஷ்!!

0

தனுஷின் அசுர வளர்ச்சிக்கு காரணம், அவரது மாமனார் ரஜினி தான் என பலரும் பேசி வரும் நிலையில், அதனை மறுக்கும் விதமாக, இதற்கான பதிலடி ஒன்றை தற்போது நடிகர் தனுஷ் கொடுத்துள்ளார்.

வைரல் பதிவு:

கடந்த ஜனவரி மாதம், நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தங்கள் விவாகரத்து முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதையடுத்து தற்போது, அவரவர் சினிமா வேலைகளில் பிஸியாக உள்ளனர். ஐஸ்வரியா காதல் ஆல்பம் ஒன்றை எடுத்து முடித்த கையோடு, மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக பேசப்படுகிறது. இதேபோல் நடிகர் தனுஷ், மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், நடிகர் தனுஷ் இப்போது அடைந்திருக்கும் உயரத்திற்கு காரணம் அவரது மாமனார் ரஜினிதான், என ஒரு தரப்பினர் பேசி வந்தனர்.

மேலும், ரஜினியின் படங்களான தங்க மகன், மாப்பிள்ளை, பொல்லாதவன் உள்ளிட்ட தலைப்புகளை பயன்படுத்தி தான், நடிகர் தனுஷ் இத்தகைய உயரத்தை அடைந்தார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, என்னுடைய இந்த வளர்ச்சிக்கு, எனது அப்பாவும், அண்ணன் செல்வராகவனும் தான் காரணம் என்றும், தன்னுடைய விடாமுயற்சியால் தான் என்னால் இத்தகைய உயரத்திற்கு வர முடிந்தது என்றும் தனுஷ் தற்போது காட்டமாக பதிலளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here