தனுஷ் மீதான போலி ஆவண வழக்கு., நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு!!

0
தனுஷ் மீதான போலி ஆவண வழக்கு., நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு!!
தனுஷ் மீதான போலி ஆவண வழக்கு., நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு!!

கோலிவுட் வட்டாரங்களில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் நடிகர் தனுஷ். கடந்த 2016-ம் ஆண்டு மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் என்பவர் தனுஷை தன் மகன் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இது குறித்து வழக்கு தொடர்ந்து நடந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி நடிகர் தனுஷ் தரப்பில் நீதிமன்றத்திடம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் போலியாக இருப்பதால், அதை முறையாக பரிசோதனை செய்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் மதுரை நடுவர் நீதிமன்றம் எண் 6 இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தனுஷ் கொடுத்த ஆவணங்களை வைத்து உத்தரவிட்ட இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு முறையானது இல்லை என்று மேலூரை சேர்ந்த கதிரவன் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விவாகரத்தில் தனுஷ் கஸ்தூரிராஜாவின் மகன் தான் என்று உயர்நீதிமன்றம் முடிவுக்கு வரவில்லை. மேலும் தனுஷின் பிறப்புச் சான்றிதழ் உண்மையானதா என்று அறியும் விதமாக கீழமை நீதிமன்றம் மதுரை மாநகராட்சி அனுப்பி வைத்தது.

அதுமட்டுமின்றி அதன் முடிவுகள் இன்றும் வழங்கப்படாத நிலையில் உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் போலியானதை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது என்று நீதிமன்றம் குற்றம் சாட்டியது. இந்நிலையில் இந்த வழக்கு மதுரை கிளையில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை வருகிற ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here