மாஜி மாமனார் ரஜினிக்கு போட்டியாக தனுஷ் செய்த காரியம் – 150 கோடியில் உருவாகும் பிரமாண்டம்!!

0
மாஜி மாமனார் ரஜினிக்கு போட்டியாக தனுஷ் செய்த காரியம் - 150 கோடியில் உருவாகும் பிரமாண்டம்!!

நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் 150 கோடிக்கு மேல் செலவு செய்து பிரம்மாண்ட வீட்டை கட்டி முடித்துள்ளதாகவும், விரைவில் அதில் குடியேற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் கட்டிய வீடு:

ஐஸ்வர்யா உடனான விவாகரத்துக்கு பின் தனுஷ் தனது கெரியரில் பிஸியாக உள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் இந்த மாதம் வெளியாக உள்ளது. தற்போது, இவர் சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டி வருகிறார்.

90,000 sq.ft பரப்பளவு கொண்ட அந்த வீட்டை 150 கோடிக்கு மேல் செலவு செய்து தனுஷ் கட்டி வருவதாகவும், விரைவில் தனது குடும்பத்துடன் அந்த வீட்டில் குடியேற உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அண்மையில் தனுஷின் அம்மா-அப்பாவின் 60வது பிறந்த நாளுக்கான பூஜைகள் இந்த வீட்டில் கோலாகலமாக நடைபெற்றது. தற்போது, இந்த வீட்டின் வேலைகள் முக்கால் வாசி முடிந்து விட்டதாக பேசப்படுகிறது.

இதையெல்லாம் விட குறிப்பிடத் தகுந்தது என்னவென்றால், தனுஷின் மாஜி மாமனார் ரஜினி வசிக்கும் வீட்டுக்கு அருகில் இந்த வீடு இருப்பது தான். இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள், மாமனாருக்கு போட்டியாக கோடி கணக்கில் பணத்தை செலவழித்து வீட்டை கட்டி முடித்து விட்டீர்கள் என கூறி வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here