புரூஸ் லீ வாழ்க்கையை படமாக எடுக்கும் பிரபல இயக்குனர்.., வெளியான அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

0
புரூஸ் லீ வாழ்க்கையை படமாக எடுக்கும் பிரபல இயக்குனர்.., வெளியான அதிகாரபூர்வமான அறிவிப்பு!!
புரூஸ் லீ வாழ்க்கையை படமாக எடுக்கும் பிரபல இயக்குனர்.., வெளியான அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

பிரபல குங் ஃபூ தற்காப்பு கலையில் சிறந்து விளங்கிய புரூஸ்லீயின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் புருஸ்லீ:

பிரபல குங் ஃபூ தற்காப்பு கலையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் புருஸ்லீ. அவரின் குங் ஃபூ தற்காப்பு கலையை மக்களுக்கு கற்று தர வேண்டும் என்று எண்ணி சினிமாவை தேர்ந்தெடுத்தார். அவர் நடிக்கும் படங்கள் மூலம் குங் ஃபூ தற்காப்பு கலையை உலகம் முழுவதும் பரப்பினார். இவரை பிடிக்காத ஆட்களே உலகில் இருக்க முடியாது. இப்படி அதிக ரசிகர்களை வைத்திருந்த புருஸ்லீ 32 வயதில் இறந்தது அவரின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவரின் இறப்பு எல்லாருக்கும் மர்மமாக இருந்த நிலையில் சமீபத்தில் அவர் சிறுநீரக பிரச்சனையால் உயிரிழந்தார் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புரூஸ்லீயை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது லைஃப் ஆஃப் பை திரைப்படத்தை இயக்கிய ஆங் லி, புரூஸ் லீ-யின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கைகலப்பாக மாறிய ஷிவின்-தனலட்சுமி சண்டை.., எல்லை மீறிய ஹவுஸ்மேட்ஸ்.., ஷாக் போட்டோஸ் வைரல்!!

மேலும் இப்படத்தில் புரூஸ் லீ கதாபாத்திரத்தில் ஆங் லீ மகன் மசோன் லீ நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்கர் விருது பெற்ற ஆங் லி இந்த படத்தை இயக்குவதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதுகுறித்து இயக்குனர் பேசுகையில், உங்கள் புகழ் பெற்ற தற்காப்புக் கலையை பிரபல படுத்திய புரூஸ் லீ வாழ்க்கை படமாக எடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here