2வது முறையாக கர்ப்பமான ஐஸ்வர்யா ராய் – போட்டோவுடன் வெளியான சுவாரஸ்ய தகவல்!!

0
2வது முறையாக கர்ப்பமான ஐஸ்வர்யா ராய் - போட்டோவுடன் வெளியான சுவாரஸ்ய தகவல்!!

பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்  பொன்னியின் செல்வன் பட டீசர் விழாவில் பங்கேற்காததன் காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பகீர் தகவல்:

பாலிவுட்டில்  முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர், கடந்த 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு ஆராத்யா என்கிற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த இவர், தற்போது மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது இவர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நந்தினி பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின், டீசர் வெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்கவில்லை. தற்போது அதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதாவது, இவர் 2வது முறையாக கர்ப்பமாக இருப்பதால் தான் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என பேசப்படுகிறது.

இது குறித்த வதந்திக்கு காரணம், ஐஸ்வர்யா ராய் தனது குடும்பத்துடன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற போது எடுக்கப்பட்ட போட்டோ தான். இந்த போட்டோவில் கருப்பு நிற உடை அணிந்து அதற்கு மேல் ஓவர் கோட் போட்டிருந்தார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் தனது கர்ப்பத்தை மறைப்பதற்காக தான் இவ்வாறு ஓவர் கோட் அணிந்துள்ளார்  என தெரிவித்தனர். ஆனால், அதற்கான எந்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here