Saturday, April 27, 2024

அப்துல் காலம் மறைந்த 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று..!!

Must Read

“இளைஞர்களின் எழுச்சி நாயகன்” என்று அனைவராலும் போற்றப்படும் நம் மரியாதைக்கு உரிய டாக்டர். அப்துல் கலாம் இந்த உலகத்தை விட்டு விண்ணுலகத்துக்கு சென்ற தினம் இன்று.

“எழிச்சியின் நாயகன்”

தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் என்ற மாவட்டத்தில் ஒரு எளிய குடும்பத்தில் மகனாக பிறந்த, அப்துல் கலாம் எளிமையும் பண்பும் நிறைந்த மனிதர். அவர் அப்படி வளர்க்கப்பட்டதற்கு காரணம் அவரின் தந்தை ஜைனுலாப்தீன் தான் என்று சொன்னால் மிகை ஆகாது. எளிய குடும்பத்தில் பிறந்தாலும், அவரது குடும்பத்தினர் அவருக்கு மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்று அவருக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.

கலாம், தனது சிறு வயதிலேயே குடும்ப சூழ்நிலை புரிந்து அவராகவே தன் குடும்பத்திற்கு உதவும் வகையில் செய்தித்தாள்களை விநியோகம் செய்யும் வேளையில் சேர்ந்து, படித்தார். கலாம், பள்ளியில் பிரகாசமான மாணவர் என்று இல்லாவிட்டாலும், கற்றலில் ஒரு ஆர்வமும்,ஈடுபாடும் அவரிடம் இருந்து வந்தது. பள்ளிப்படிப்பை தனது சொந்த ஊரில் படித்த கலாம், கல்லூரி மேற்படிப்பிற்கு திருச்சியில் உள்ள தூயவளன் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். அவருக்கு கல்லூரி வாழ்க்கையும் அவ்வளவு எளிதாக இல்லை.

abdul kalam the great soul
abdul kalam the great soul

“சிறந்த மாணவன்” என்று போற்றப்பட்டு அவருக்கு கல்லூரியில் புத்தகம் ஓன்றை பரிசாக வழங்கி உள்ளனர், ஆனால், தனது சொந்த ஊருக்கு செல்ல பணம் இல்லாததால், அந்த புத்தகத்தை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து தான் ஊருக்கு சென்று உள்ளார். இளமையில் வறுமையை அனுபவித்ததால் என்னமோ, இளைஞர்களின் உணர்வுகளை நன்கு புரிந்து கொண்டு உள்ளார்.

“கல்வி என்னும் வெளிச்சம்”:

இப்படி வறுமை என்ற இருளை கல்வி என்ற ஒரு சூரிய ஒளி கொண்டு விரட்டி அடிக்கலாம், என்று கலாம் அன்றே உணர்ந்து இருந்தார். தனது விடாமுயற்சி மூலமாக முதன்மை அறிவியலாளராக சென்னை தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் சேர்ந்தார். பின்பு, அறிவியலாளராக அவரது வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது. இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக ஆக்க வேண்டும் என்பது அவரது, வாழ்க்கை லட்சியம்.

Dr APJ Abdul Kalam |
Dr APJ Abdul Kalam |

இவரது திறமையை கண்டு இந்திய மக்கள் இவரை ஒரு குடியரசு தலைவராக தேர்ந்தெடுத்தனர். இளைஞர்களுக்குள் இருக்கும் தீயை சரியான வழியில் செலவு செய்ய உதவி புரிந்தார். இன்று இந்த மனிதரை வெறுக்கும் இளைஞர் ஒருவர் கூட இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லலாம். கலாம் அவர்களின் சிறப்பு அவர் ஒரு போதும் யாரையும் குற்றம் சொல்லவில்லை, மாறாக எப்படி முன்னேறலாம் என்றும் அதற்கு என்ன செய்யலாம் என்று தான் கூறியுள்ளார். அதனால் தான் இவருக்கு அனைவரும் ரசிகர்கள்.

“நீண்ட பயணம்”:

இப்படியாக தனது வாழ்நாள் முழுக்க மக்களுக்காக, நாட்டில் உள்ள இளைஞர்களுக்காக என்று செலவு செய்த இந்த மாமனிதர், மாணவர்களுக்கு மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் உரை நிகழ்த்திகையில் மயங்கி உயிழந்தார். அப்போதும் கூட மாணவர்களின் நலனுக்காக தான் உரை நிகழ்த்தினார். இப்படிப்பட்ட மனிதருக்கு, நமது தமிழக அரசு மற்றும் இந்திய அரசு தகுந்த மரியாதையை செய்து இறுதி சடங்கை செய்தனர்.

“பேரறிஞர்கள் உயிர் துறப்பதில்லை, நம் மனதில் நீங்காத இடம் அவர்களுக்கு என்றும் உண்டு”

இந்த வாசகத்திற்கு கலாம் அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு என்று கூட சொல்லலாம். இவரது 2020 கனவை என்றேனும் ஒரு நாள் இந்திய மக்களாகிய நாம் நிறைவேற்ற வேண்டும், அதுவே நாம் அவருக்கு செய்யும் சமர்ப்பணம்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -