அப்படி போடு.,இனி பால் பாக்கெட் வாங்க ஆதார் கட்டாயம்! ஆவின் நிர்வாகத்தால் ஷாக்கான மக்கள்!!

0
அப்படி போடு.,இனி பால் பாக்கெட் வாங்க ஆதார் கட்டாயம்! ஆவின் நிர்வாகத்தால் ஷாக்கான மக்கள்!!
அப்படி போடு.,இனி பால் பாக்கெட் வாங்க ஆதார் கட்டாயம்! ஆவின் நிர்வாகத்தால் ஷாக்கான மக்கள்!!

ஆவின் பால் பாக்கெட் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, இனி ஆதார் கட்டாயம் என்ற அறிவிப்பை ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஆவின் அறிவிப்பு:

நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்களின் பால் தேவையை ஆவின் என்ற அரசு நிறுவனமும், தனியார் பால் பாக்கெட் நிறுவனமும் பூர்த்தி செய்து வருகிறது. அந்த வகையில், சமீப தினங்களாக, ஆவின் நிர்வாகம் பால் பாக்கெட் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் பால் கொள்முதல் விலையை, இதுவரை உயர்த்தாததை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இது ஒரு புறம் இருக்க, தற்போது மாதாந்திர அட்டை மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என ஆவின் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இலவச பேருந்துகளில் கொண்டு வரப்பட்ட புதிய மாற்றம்.., போக்குவரத்து துறை அதிரடி!!!

நுகர்வோருக்கு பால் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், மாதாந்திர சலுகைகளை பெற்று வரும் வாடிக்கையாளர்களுக்கு சீரான பால் விநியோகத்தை உறுதி செய்வதற்காகவும் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக ஆவின் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதை அனைத்து நுகர்வோர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என மண்டல அலுவலர்களுக்கு ஆவின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here