ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு மாதம் ரூ.15,000 வருமானம் – ஆவின் நிறுவனம் அறிவிப்பு..!

0

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க ஆவின் நிறுவனம் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஆவின் நிறுவனம் அறிக்கை..!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகாத வண்ணம் மாண்புமிகு தமிழநாடு முதல்மைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அவர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் ஆவின் பால் மற்றும் உப பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல் கட்டமாக திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக ஆவின் நிறுவனம் நியமனம் செய்துள்ளது.

தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 40 லட்சம் லிட்டர் பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்பு முகவர்கள் ஆவதற்காக வைப்பு தொகை ரூ.10,000 இருந்த நிலையில் தற்போது வைப்புத் தொகை ரூ.1,000ஆக ஆவின் நிறுவனம் குறைத்துள்ளதால் 575 புதிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசுப்பள்ளிகளில் ஆகஸ்ட் 3 முதல் மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்களுக்கு புதிய வழி வகை..!

தமிழகம் முழுவதும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை தீவிரப்படுத்தும் வகையில் வாழ்வாதாரம் இழந்திருக்கும் ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆவின் பொது மேலாளர் அலுவலகங்களில் ரூ.1,000 பணமாகவோ அல்லது காசோலையாகவோ வைப்பு தொகையாக செலுத்தி உடனடியாக நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமனம் பெற்றுக்கொள்ளலாம்.

இதனால் பால் முகவர்களாக மாறும் ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நடமாடும் பால் வண்டி முகவர்களாக மாதம் சுமார் ரூ.15,000 குறையாமல் வருமானம் கிடைக்க ஆவின் நிர்வாகம் வழிவகை செய்துள்ளது. எனவே இவ்வாய்பினை பயன்படுத்திகொள்ள அனைவரும் வருக வருக என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here