உடலை வில்லாக வளைத்த 14 வயது சிறுமி.,,கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் அசத்தல்!!

0
உடலை வில்லாக வளைத்த 14 வயது சிறுமி.,,கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் அசத்தல்!!
உடலை வில்லாக வளைத்த 14 வயது சிறுமி.,,கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் அசத்தல்!!

இங்கிலாந்தின் பீட்டர் பரோவில் வசிக்கும் லிபர்ட்டி பாரோஸ், 20 மீட்டர் தூரத்தை 22 விநாடிகளில் உடலை பின்பக்கம் வளைத்தப்படி நடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கின்னஸ் உலக சாதனை:

கின்னஸ் உலக சாதனை தினத்தையொட்டி லண்டனில் பல சாதனையாளர்களுக்‍கு கின்னஸ் சாதனை குழுவினர் சர்டிபிகேட்டுகளை வழங்கி பெருமைப்படுத்தினர். அந்த நிகழ்ச்சியில் உலகிலேயே “அதிகம் வளையக்கூடிய பெண்” என்று அழைக்கப்படும் 14 வயதான லிபர்ட்டி பாரோஸ் தனது உடலை முழுவதுமாக பின்னோக்‍கி வளைத்து 22 நொடியில் 20 மீட்டர் தூரம் நடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் இந்த சிறுமி, உடலை வளைத்தும் முறுக்கியும் ஏராளமான வித்தைகளை செய்து பல சாதனைகளை படைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் பல்வேறு ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும், பாராட்டுக்களையும் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மக்களே உஷார்.,, 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு .,,வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன் நடன கலைஞர்களின் அசைவுகளை முயற்சி செய்து பார்க்கும் சமயத்தில் தான், தன்னால் உடலை அதிகமாக வளைக்க முடியும் என்பதை முதன் முதலில் உணர்ந்தாக பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். அவரின் சாதனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 14 வயதாகும் லிபர்ட்டி, தனது யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here