இனி சனி மற்றும் ஞாயிறு தளர்வுகள் இல்லை.. முழு ஊரடங்கு… மாநில அரசு அறிவிப்பு!!!

0

கேரளா மாநில அரசு வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

கேரளாவில் தொற்று விகிதம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் லேசான தளர்வு அமல்படுத்தப்பட்டது. கேரளாவில் 16-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. கேரளாவில் நேற்று மட்டும் 14 ஆயிரத்து 233 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 173 ஆக பதிவாகியுள்ளது.

சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களுக்கு அரசு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்பட அத்தியாவசிய நிறுவனங்கள், கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், நேற்று கட்டுப்பாடு இல்லா தளர்வு அமல்படுத்தப்பட்டது.இதையொட்டி கடைவீதிகளில் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்த நிலையில் கேரளாவில் இன்றும் நாளையும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி உணவகங்களில் பார்சல் சேவையும் நிறுத்தப்படுகிறது அதேசமயம் உணவுகள் டோர் டெலிவரி மட்டும் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here