வங்கி கடன் தவணை செலுத்த சலுகை இல்லை… உச்ச நீதிமன்றம் உத்தரவு!!!

0

நாட்டில்  பரவி உள்ள கொரோனாவின் இரண்டாம் அலையை காரணமாக வைத்து வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கான  கால அவகாசத்திற்கு எந்தவித சலுகைகளும் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று பரவி, முதல் மற்றும் இரண்டாம் அலை என தொடர்ந்து கொண்டே போகிறது. இதனால் முழு  ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டு ,பின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என இருக்கும் இந்த வேளையில் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.இந்த இரண்டாம் அலையின் பாதிப்பால் இந்தியாவில் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இது தொடர்பாக விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம்  மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வங்கி கடன் தவணைகளை செலுத்துவதற்கு புதிய கால அவகாசத்தை மக்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

 

மேலும், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கின்  போது, மக்கள் வாங்கிய வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. அதேபோல், தற்போது கொரோனா 2வது அலையால் நாடு முழுவதும் அதிக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பண புழக்கமும் இல்லை. எனவே கடன் தவணை செலுத்த கால அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று  அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதனை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷன், எம்.ஆர்.ஷா அமர்வு  ‘‘கொரோனா 2வது அலையை காரணம் காட்டி வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கு புதிய கால அவகாசம் வழங்க உத்தரவிட முடியாது. மேலும், இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த உத்தரவு பிறப்பிக்கவும் விரும்பவில்லை. இதில் தலையிட நாங்கள் பொருளாதார நிபுணர்களும் கிடையாது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என தெரிவித்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here