கொரோனா தடுப்பூசி விளைவுகள் இழப்பீடு – மத்திய அரசிடம் வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் வலியுறுத்தல்!!!

0

எந்தவொரு வெளிநாட்டு அல்லது இந்திய கோவிட் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கும் இழப்பீடு வழங்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தடுப்பூசி விளைவுகள் இழப்பீடு:

இந்திய கோவிட் தடுப்பூசி அல்லது வெளிநாட்டு  உற்பத்தியாளர்களுக்கும் இழப்பீடு வழங்குவதில் இதுவரைக்கும் எந்த ஒரு  முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு நேற்று திட்டவட்டமாக கூறியது. இந்தியாவில் சுகாதார அமைச்சக அதிகாரியுடன்  கூட்டத்தில் உரையாற்றிய  மாடர்னா, பைசர் ஆகிய நிறுவனங்கள் தங்களது தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கக்கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருக்கின்றன.

இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனெகாவின் ‘கோவிஷீல்ட்’ தயாரிக்கும் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ),  அப்படி இழப்பீடு வழங்கினால், விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

மேலும் “அனைத்து தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கும், இந்தியர்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டினராக இருந்தாலும் ஒரே பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) மட்டுமல்ல, அனைத்து தடுப்பூசி நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால் கடன்களுக்கு எதிராக இழப்பீடு பாதுகாப்பு பெற வேண்டும்,” என்று ஆதார் பூனவல்லா- தலைமையிலான நிறுவனம் அரசாங்கத்திடம் கூறியதாக கூறப்படுகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here