சீனாவில் முதன்முதலாக மனிதனுக்கு தோன்றிய பறவைக்காய்ச்சல் – வைரலாகும் அதிர்ச்சி தகவல்!!

0

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்று கடுமையாக உலகம் முழுவதும் பாதித்து வரும் நிலையில் தற்போது சீனாவில் முதன்முதலாக மனிதனுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனிதனுக்கு பறவைக்காய்ச்சல்:

நாடு முழுவதும் மக்களை பாதித்துக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று முதன்முதலில் சீனாவில் இருந்து பரவ துவங்கியது. அதனை தொடர்ந்து கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை , மற்றும் மஞ்சள் பூஞ்சை என பல்வேறு நோய் தொற்றானது பரவி வருகிறது.

தற்போது சீனாவில் மனிதனுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனும் செய்தி உலக நாடுகளுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தீவிரமாக பரவி வரும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் அடுத்த வைரஸா என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் 41 வயதான ஒருவர் எச் 10 என் 3 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் காய்ச்சல் மற்றும் வேறு சில அறிகுறிகளுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையின்போது அவர் எச் 10 என் 3 ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆல் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here