பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தன் காதலியான ஹேரி சைமண்ட்ஸை ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இவருக்கு வயது 56. இவர் 33 வயதான தனது நீண்ட நாள் காதலி கேரி சைமண்ட்ஸை நேற்று திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவரும் 2018 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சென்ற ஆண்டு குழந்தை பிறந்தது. பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக அறிவித்தனர்.
இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன், கேரி சைமண்ட்ஸை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது போரிஸ் ஜான்சனுக்கு மூன்றாவது திருமணம். மிகவும் எளிய முறையில் லண்டனில் உள்ள ஒரு தேவாலயத்தில் இவர்கள் திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணத்தில் குறைந்த அளவிலேயே உறவினர்கள் பங்கேற்றனர்.
இந்த தம்பதியருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திருமணம் முடிந்த பின் போரிஸ் ஜான்சன், கேரி சைமண்ட்ஸ் தம்பதி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!