நடிகரும், சினிமா விமர்சகருமான புகழ் நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Instagram => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!
வெங்கட் சுபா மரணம்:
கொரோனா பரவலின் இரண்டாம் அலையால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை மிகவும் கொடியதாக மாறியுள்ளது. இதன் காரணமாக உயிரிழப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முன்னாள் மீனாவின் அப்பாவான வெங்கட் சுபா; சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
பல திரைப்படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் வெங்கட கிருஷ்ணன். மேலும் 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா துறையில் பல வடிவங்களில் பணியாற்றி வந்துள்ளார். அப்படிப்பட்ட இவரது இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களில் மட்டும் தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் இயக்குநர் கேவி ஆனந்த், நடிகர் பாண்டு உள்ளிட்டவர்கள் கொரோனாவால் இறந்த நிலையில்; தற்போது இந்த வரிசையில் சுபா வெங்கட் உயிரிழந்துள்ளார். பிரபலங்களின் மரண செய்திகள் அடுத்தடுத்து வருவதால் சினிமா ரசிகர்கள் கடும் துக்கத்தில் உள்ளனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!