பொறியியல் மாணவர்களுக்கு பழைய எழுத்து தேர்வு போல வினாத்தாள் வடிவமைப்பு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

0

கொரோனா தொற்றின் தாக்கத்தின் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நடப்பு செமெஸ்டர் தேர்வுக்கு ஜூன் 7ம் தேதிக்குள் விண்ணப்பித்து 13ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தவேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

செமெஸ்டர் தேர்வு:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் அவதிப்பட்டு வந்து நிலையில் நோய் தொற்று பரவலை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. பலகட்ட முயற்சிகளுக்கு பின்னனர் தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்தது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இருப்பினும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்த வண்ணம் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆன்லைன் மூலம் வகுப்புகள் மட்டுமல்லாது தேர்வுகளும் நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த ஆன்லைன் தேர்வை தொடர்ந்து தற்போது அண்ணா பல்கலைகழகம் தேர்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பொறியியல் மாணவர்களுக்கு நடப்பு செமஸ்டர்கான வினாத்தாள் வடிவமைப்பு பழைய எழுத்து தேர்வு அடிப்படையிலேயே இருக்கும் என கூறிய அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களை ஜூன் 7தேதிக்குள் விண்ணப்பித்து 13ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தவேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here