ஜூன் 1 முதல் உள்நாட்டு விமானக் கட்டணத்தில் புதிய மாற்றம்..!! மத்திய அமைச்சகம் அறிவிப்பு!!!

0

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஜூன் 1 ஆம் தேதி முதல், உள்நாட்டு விமான கட்டணத்தில் குறைந்தபட்ச வரையறையை 13 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்துவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. இதனால் விமான போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன.

எனவே மத்திய அரசு உள்நாட்டு விமான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இது  நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் விமான நிறுவனங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. அதன்படி வரும் ஜூன் 1 முதல், உள்நாட்டு விமான கட்டணத்தில் குறைந்தபட்ச வரையறையை 13 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த கட்டண உயர்வின் மூலம் 40 நிமிடத்துக்கு உட்பட்ட விமான போக்குவரத்துக்கான கட்டணம் ரூ.2,300-ல் இருந்து ரூ.2,600 ஆக அதிகரிக்கும். அதிகபட்ச வரையறையில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here