அண்டர்கவர் பில்லியனர் ரியாலிட்டி தொலைக்காட்சித் தொடரின் மூலம் பிரபலமான கிம் கர்தாஷியன் வழக்கம்போல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ‘ஓம்’ காதணிகளை அணிந்து புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தொடரும் சர்ச்சை:
அண்டர்கவர் பில்லியனர் ஒரு அமெரிக்க ரியாலிட்டி தொலைக்காட்சித் தொடராகும் , இது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படுகிறது. இதன் மூலம் பிரபலமானவர் தான் கிம் கர்தாஷியன். சிறிது நாட்களுக்கு முன்னாள் கிம் கர்தாஷியன் சமீபத்தில் கலிபோர்னியா தொழிலாளர் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு சர்ச்சையில் சிக்கிய அவர் தற்போது ‘ஓம்’ காதணிகளை அணிந்து பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தனது பிராண்டை விளம்பரப்படுத்தும் போது ‘ஓம்’ வடிவ காதணிகளை அணிந்திருப்பது கலாச்சார அவமதிப்பு போல் உள்ளது என பலர் கூறி வருகின்றனர். புனித சின்னத்தை ஒரு துணைப் பொருளாகப் பயன்படுத்தியது குறித்து ட்விட்டரில் பொங்கும் நெட்டிசன்கள். கலிஃபோர்னியா தொழிலாளர் சட்டங்களை மீறியதாக கிம் மீது குற்றம் சாட்டப்பட்டது, அவரது ஊழியர்கள் தாக்கல் செய்த சட்ட வழக்கைத் தொடர்ந்து, அவர்கள் ஊதியத்திலிருந்து வரிகளைத் தடுத்து நிறுத்தியதாகவும் ஆனால் அந்தத் தொகையை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர். அதனை தொடர்ந்து இந்த சர்ச்சையில் சிக்கியதால் இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.