பெட்ரோல் & டீசல் விலை: இன்றைய நிலவரத்தை பாருங்க மக்களே!!!

0

சென்னையில் நேற்று பெட்ரோல், ஒரு லிட்டர் 95.28 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 89.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பொதுமக்களின் தினசரி தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் வந்துவிட்டன. சில வருடங்களுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. பின்னர் இம்முறை மாற்றப்பட்டு தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது.

 

இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது.நாடு முழுதும் வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 95.28 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 89.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது. இது சற்றே மக்களுக்கு ஆறுதலாக இருந்தாலும், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here