தடுப்பூசி போட்டு கொண்ட ‘பாய்ஸ்’ பட நடிகர் – வைரல் புகைப்படம்!!

0

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் நகுல். தற்போது கொரோனா பரவலின் காரணமாக சினிமா பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது  ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது நடிகர் நகுல் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் நகுல் :

கொரோனா தொற்று பரவலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை குறைக்கவும் தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தி வந்தது அரசு. சினிமா பிரபலங்களும் தங்கள் பங்கிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும் புகைப்படத்தை வெளியிட்டுவந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆகியவர் நகுல். இவர் காதலில் விழுந்தேன் ,மாசிலாமணி போன்ற திரைப்படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவரது நடிப்புக்கு மட்டுமல்லாது இவரது இன்ஸ்டா போட்டோஸ் மற்றும் வீடியோகளுக்கு தனி ரசிகர் கூட்டம்  உள்ளது. தனது குழந்தையுடன் விளையாடுவது மற்றும் மரம் நடுவது போன்ற விடீயோக்களை பதிவு செய்து வந்த அவர் தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here