போலி தடுப்பூசி இணையதளத்தை தயாரித்த 2பேர் கைது – டெல்லியில் நடந்த மோசடி!!!

0

டெல்லியில் போலி தடுப்பூசி இணையதளத்தை உருவாக்கி பல பேரை மோசடி செய்த 2பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

போலி தடுப்பூசி இணையதளத்தை தயாரித்த 2பேர் கைது:

ஆன்லைனில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்யும் நபர்களைக் குறிவைத்து போலி கோவிட் தடுப்பூசி பதிவு வலைத்தளத்தை உருவாக்கியதாகவும், ஆயிரக்கணக்கானவர்களை ஏமாற்றி ரூ 40 லட்சம் வரை மோசடி செய்ததாகவும்; இரண்டு நபர்களை டெல்லி போலீஸ் சைபர் செல் கைது செய்துள்ளது.

இது குறித்து போலீசார் கூறிய போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் – சேகர் பெரியார் மற்றும் அசோக் சிங் – அரசாங்கத்தின் கோவின் போர்ட்டலைப் போன்று ஒரு வலைத்தளத்தை உருவாக்கி ஒவ்வொரு பயனரிடமிருந்தும் ரூ 4,000 முதல் ரூ 6,000 வரை வசூலித்தனர்; அவற்றிக்கு போலி பதிவு ரசீதுகளையும் அவர்களுக்கு வழங்கினர்.

இதுபோன்ற ஐந்து போலி வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களை டெல்லி காவல்துறையினர் இன்றுவரை தடுத்துள்ளனர், மேலும் வலைத்தளங்களையும் இணையதளங்களையும் உருவாக்குவதில் ஈடுபட்ட மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களையும் தேடி வருகின்றனர்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here