இந்தியாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு கவலை அளிக்கிறது – உலக சுகாதாரத்துறை தலைவர் வேதனை!!

0
இந்தியாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு கவலை அளிக்கிறது - உலக சுகாதாரத்துறை தலைவர் வேதனை!!
இந்தியாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு கவலை அளிக்கிறது - உலக சுகாதாரத்துறை தலைவர் வேதனை!!

கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கத்தினால் இந்தியாவில் நாளுக்கு நாள் ஏற்படும் உயிரிழப்பின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. தற்போது இதுகுறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் சுமார் இரண்டு மாதத்திற்கும் மேலாக கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மக்களிடையே மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து மாநில மருத்துவமனைகளிலும் நோயாளிகள் குவிந்த வண்ணம் உள்ளார்கள். இந்த கடுமையான நேரத்தில் நாட்டில் தடுப்பூசி மற்றும் படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் நோயாளிகள் கொரோனவினாலும் மறுபக்கம் மருத்துவ வசதி கிடைக்காமலும் உயிரிழந்து வரும் சோகம் இந்தியாவில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. தற்போது இதுகுறித்து உலக சுகாதாரத்துறை தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, இந்தியாவில் கொரோனா வைரஸ் சூழல் வேதனை அடைய செய்கிறது. மக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருவதும், உயிரிழப்பதும் வேதனையளிக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ்
இந்தியாவில் கொரோனா வைரஸ்

இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பு தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. ஆக்சிஜன் செறிவூட்டிகள், தேவையான இடங்களில் மொபைல் மருத்துவமனை அமைக்க டென்ட்கள், முகக்கவசம் மற்றும் மருந்துகளையும் அனுப்பி வருகிறோம். மேலும் இந்த நேரத்தில் இந்தியாவிற்கு உதவி புரிந்து வரும் பல்வேறு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு நன்றி தெரிவிக்கிறது. அதேபோல் அமெரிக்கா, ஆப்ரிக்கா கண்டத்திலும் பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கும் தொடர்ந்து உதவி புரிந்து வருவதாக கெப்ரியாசிஸ் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘கொரோனா வைரஸ் முதல் அலையைவிட 2வது அலை மிகவும் மிக மோசமான உயிர் கொல்லியாக இருக்கும்’என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here