சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்கப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல்:
நாள்தோறும் கச்சா எண்ணெய்யின் விலைகேற்ப பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இறக்குமதி செலவு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றியமைக்கப்படும். இதனை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றியமைத்து வரும். மேலும் கடந்த கொரோனா காலத்தில் மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாதம் வரை பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை மாற்றியமைக்கவில்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஐஆர்சிடிசி செயலியில் பேருந்துகளையும் முன்பதிவு செய்யலாம்’ – புதிய அப்டேட்டால் பயனாளர்கள் குஷி!!
இன்றைய நிலவரம்:
அதன்பிறகு ஜூன் மாதத்தில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நாள்தோறும் மாற்றியமைத்தனர். தற்போது இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.89.39 ஆகவும் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ. 82.33 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.89.39 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.82.33 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.