இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் தற்போது தங்களது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் இந்தியா அணியின் பார்ட் டைம் பௌலர் ரோஹித் சர்மா பந்துவீசினார். அதில் அவர் ஹர்பஜன் சிங் பாணியை கடைபிடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தங்களது முதல் டெஸ்ட் போட்டியை சென்னை மைதானத்தில் வைத்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் பிரம்மிப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களது விக்கெட்டை வீழ்த்த இந்தியா அணியின் பந்துவீச்சாளர்கள் போராடி வருகின்றனர். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி கேப்டன் ரூட் இரட்டை சதத்தை அடித்து அசத்தினார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த மைதானம் இந்தியா அணிக்கு கைகொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த போட்டியில் இந்தியா அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இங்கிலாந்து அணியை சமாளிக்க முடியாமல் இந்தியா அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பார்ட் டைம் பௌளரான ரோஹித் ஷர்மாவை பந்து வீச அழைத்தார். இதனை தொடர்ந்து ரோஹித் சர்மா பந்து வீச வந்தார்.
‘தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த சசிகலா முயற்சி’ – அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பு பேட்டி!!
ஹர்பஜன் பாணியில் ரோஹித்:
அவர் பந்து வீசும் பொழுது இந்தியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பாணியை கடைபிடித்தார். அவரை போலவே இவரும் ஓடி வந்து பந்து வீசினார். அவரது ஸ்டைலை அப்படியே இவரும் கடைபிடித்தார். இது இவரது ரசிகர்கள் மட்டுமன்றி அனைவரையும் கவர்ந்தது. மேலும் தற்போது ரோஹித் சர்மா, ஹர்பஜன் ஸ்டைலில் பந்துவீசிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Rohit Sharma imitating Bhajji's Action on the last ball before Tea ?@ImRo45 • @harbhajan_singh pic.twitter.com/MhsQxPbJcc
— Saish ? (@CricketSaish45) February 6, 2021