தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் 57,000 ரூபாய் கடன்..!

0

தமிழகத்தில் உள்ள குழந்தைகள் உட்பட அனைவர் மீதும் மற்றும் இனி பிறக்கவிருக்கும் குழந்தைகள் மீதும் தலா ரூ. 57,000 கடன் சுமை உள்ளதாக கமல்ஹாசன் ட்விட்டரில் விமர்சித்து உள்ளார்.

தமிழக பட்ஜெட் 2020..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

தமிழ்நாடு மாநில பட்ஜெட் பிப்ரவரி 14ம் தேதி சட்டப்பேரவையில் தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சரும் ஆன பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகளும், துறை வாரியாக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இது குறித்து பல விமர்சனங்களும் எழுந்தன. இந்த பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் சுமை 4,56,660 கோடியாக உயர்ந்து உள்ளது.

இவ்வளவு அதிகமா..?

2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி தொடங்கிய போது கடன் சுமை 1,18,610 கோடியாக இருந்தது. ஆனால் அதிமுக ஆட்சியின் கடைசி பட்ஜெட்டில் கடன் சுமை 4,56,660 கோடியாக உயர்ந்துள்ளதை பலரும் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட கமல், இந்த கடன் சுமைக்கு இரு கழகங்கள் தான் காரணம் எனவும் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகள் என ஒவ்வொருவரின் தலையிலும் சுமார் ரூ.57,000/ ரூபாய் கடன் சுமை உள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here