மாணவர்கள் ஏ4 தாளில் வீட்டில் இருந்து தேர்வெழுதி அனுப்பலாம் – சென்னை பல்கலை அதிரடி!!

0
madras-university
madras-university

கொரோனா பாதிப்பு காரணமாக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் சென்னை பல்கலைக்கழகம் புது விதமான தேர்வு முறை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்த படியே ஏ4 தாள்களில் தேர்வெழுதி விடைத்தாள்களை கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி செமஸ்டர் தேர்வு:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பள்ளி ஆண்டுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கும் இறுதிப்பருவ தேர்வுகளை தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. யுஜிசி அறிவுறுத்தலின் பேரில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இறுதிப்பருவ தேர்வுகளை நடத்தி முடிக்க பல்கலை, கல்லூரிகள் தயாராகி வருகின்றன. அண்ணா பல்கலை பொறியியல் மாணவர்களுக்கு AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

online class example

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு பெற்ற உறுப்பு கல்லூரிகளுக்கு தேர்வு முறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறும் என வெளியான தகவலுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் மறுப்பு தெரிவித்து உள்ளார். தேர்வு நடைமுறைகள் குறித்து சென்னை பல்கலை கூறுகையில்,

  • மாணவர்கள் வீட்டில் இருந்தபடி ஏ4 தாளில் தேர்வெழுதி அவரவர் பல்கலைக்கழக அல்லது கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • வினாத்தாட்கள் மாணவர்களுக்கு இணையதளம் அல்லது வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.
  • மாணவர்கள் 18 பக்கங்களுக்கு மிகாமல் 90 நிமிடங்களில் தேர்வினை எழுதி முடிக்க வேண்டும்.
  • விடைத்தாள்களை ஸ்பீட் போஸ்ட் மூலம் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here