தமிழ் திரைப்பட நடிகரான விஷ்ணு விஷால் தனது காதல் மனைவியான ரஜினி நட்ராஜை விவாகரத்து செய்த நிலையில் தற்போது புதிய காதலியான ஜுவாலா கட்டாவின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு மோதிரம் அணிவித்து புதிய வாழ்க்கையை துவங்கியுள்ளார்.
விஷ்ணு விஷால்
தமிழில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால் முதல் படத்திலேயே தனது எதார்த்த நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வந்தார். முண்டாசுபட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற வெற்றி படங்களை குவித்தவர் விஷ்ணு விஷால்.
இவர் ரஜினி நட்ராஜை காதல் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு ஆர்யன் என்ற குழந்தையும் உள்ளது. சில கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இவர்கள் இருவரும் பிரிந்த நிலையில் விஷ்ணு பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலித்து வந்தார். இதற்கு ரசிகர்கள் பலர் ஆரம்பத்தில் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
Happy birthday @Guttajwala
New start to LIFE..
Lets be positive and work towards a better future for us,Aryan,our families,friends and people around..Need all your love n blessings guys..#newbeginnings
thank you @basanthjain for arranging a ring in d middle of d night.. pic.twitter.com/FYAVQuZFjQ
— VISHNU VISHAL – stay home stay safe (@TheVishnuVishal) September 7, 2020
ஆனால் அவரின் உறுதியான காதலால் ரசிகர்கள் தனது மனதை மாற்றிக்கொண்டனர். இன்று ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளை ஒட்டி நள்ளிரவில் அவருக்காக மோதிரம் அணிவித்து அவர்களின் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் தமது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளன. இவர்கள் விஷாலின் வீட்டில் தான் முதன்முதலில் சந்தித்தார்களாம். முன்னதாக விஷ்ணுவின் பிறந்தாளுக்கு மும்பையில் இருந்து வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார் ஜுவாலா.