வனத்துறை விசாரணையின் போது உயிரிழந்த விவசாயி – குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி முதல்வர் அறிவிப்பு..!

0

வனத்துறை விசாரணையின் போது உயிரிழந்த விவசாயி முத்து குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

உயிரிழந்த குடும்பத்துக்கு அரசு நிதியுதவி..!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து விவசாயி. இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடையம் வனத்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றபோது அணைக்கரை முத்துவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்போதே அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை அறிந்த அவரது உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே அணைக்கரை முத்துவின் உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் நேற்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக, கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகள் – ஐ.நா எச்சரிக்கை..!

Tamilnadu CM
Tamilnadu CM

இந்த நிலையில் அணைக்கரை முத்து குடும்பத்திற்கு தமிழக அரசு நிதியுதவி அறிவித்துள்ளது. இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்த அணைக்கரை முத்து குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here