இந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சித்தார்த். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்தும் பாடியும் அசத்தி வருகிறார். மேலும் தற்போது இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் டக்கர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்திற்கான promotion விழாக்களில் பிசியாக கலந்து கொண்டு வருகிறார். மேலும் இவர் நடிகை அதிதியுடன் நெருக்கம் காட்டி வருவதும், அவருடன் அவ்வப்போது வெளிநாடுகளில் சுற்றுலா செல்வதுமாக இருந்து வருகிறார். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
பேட்மிண்டன் தொடரில் ஏமாற்றிய பி வி சிந்து…, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிய சாய்னா நேவால்!!
இந்நிலையில் இப்பட விழாவிற்கு பிறகு பேட்டியாளர்களுடன் சித்தார்த் சந்திப்பு வைத்துள்ளார். அதில் இவரிடம் நீங்கள் காதலிக்கிறீர்களா என மேலும் அது குறித்து கூறும் படி கேட்டுள்ளனர். அதற்கு அவர், இந்த meet என்னுடைய படத்திற்கானது, இதில் என்னுடைய தனிப்பட்ட life குறித்து பேச எனக்கு விருப்பம் இல்லை. மேலும் இது பற்றி தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆர்வமாக இருந்தால், தனிப்பட்ட சந்திப்பில் பேசும் போது கூறுகிறேன் என பதிலளித்துள்ளார்.