ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கான கடைசி லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியானது குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை எதிர்த்து தனது சொந்த மண்ணில் மோதியது. இதில், RCB அணி வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். தவறினால் மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும் என்ற நிலை இருந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனால் இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரே நோக்கம் RCB அணி தோல்வி அடைய வேண்டியதாகவே இருந்து வந்தது. இதே போலவே, RCB அணியும் குஜராத் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
முத்து பட பிரபலம் நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!
RCB அணியின் இந்த தோல்வியால், மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. RCB மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியை கடைசி வரை பார்த்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதே மகிழ்ச்சியுடன் சக வீரர்களுடன் கொண்டாடி உள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.