தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு – அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு..!

0

கடந்த மார்ச் 24ம் தேதி தேர்வு எழுத முடியாத +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

+2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது காரணமாகவும் மாணவர்கள் நிறைய பேர் பங்கேற்க முடியாத ஒரு சூழல் இருந்தது. அதனால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்ததையடுத்து இவர்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் பல்வேறு கட்டங்களில்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு தற்போது 27ம் தேதி இந்த தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதையடுத்து வருகிற 13ம் தேதியிலிருந்து 17ம் தேதி வரை இந்த தேர்வுக்கான புதிய நூழைவுச் சீட்டை www.dge.tn.go.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதியில் ஆண்டு தேர்வு மார்ச் 24ம் தேதி வேதியியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல் இந்த பாடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் வரும் 13ம் தேதி முதல் தொடக்கம் – அமைச்சர் செங்கோட்டையன்..!

மேலும் 12ம் வகுப்பில் இறுதித் தேர்வு எழுதாத 34,482 மாணவர்களின் 718 மாணவர்கள் தேர்வு எழுத ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடந்து முடித்த பின்னர், 4 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here