வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திக் கொலை – சென்னையில் பயங்கரம்..!

0

சென்னை குன்றத்தூரில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் பொது வாழ்க்கை முடக்கம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 6 கட்டங்களாக கடந்த ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இதற்கிடையே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கிவிட்டன. பொதுமுடக்கத்தால் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையையே சமாளிக்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

இதற்கிடையே சென்னையில் இருந்து சமாளிக்க முடியாத காரணத்தினால் பலர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். சென்னையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா காலத்திலும் வீட்டு வாடகை வாங்கியே ஆக வேண்டும் என்று சில வீட்டு உரிமையாளர்களும் உள்ளனர்.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கியது!!

வீட்டு உரிமையாளர் குத்திக்கொலை..!

இந்நிலையில் சென்னை குன்றத்தூரில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். குன்றத்தூரில் குணசேகர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அஜித் என்ற இளைஞர் வாடகைக்கு குடியிருந்ததாக கூறப்படுகிறது. ஊரடங்கு காரணமாக 4 மாதமாக வாடகை பணம் அஜித் கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே 4 மாத வாடகை பாக்கியை கேட்டதால் வாடகைதாரர் அஜித் என்பவருக்கும் வீட்டு உரிமையாளர் குணசேகரன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த வாடகைதாரர் அஜித் வீட்டு உரிமையாளரை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். தகவலறிந்த குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாடகைதாரர் அஜிதை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் கொலை செய்யப்பட்ட செய்தி சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் வீட்டு உரிமையாளர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here