முன்னணி நடிகையான சமந்தா இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான யசோதா திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் அடுத்த படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா சாகுந்தலம் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர். இவர் பர்சனல் வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் தொடர்ந்து தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படி இருக்கையில் சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சாகுந்தலம் படத்திற்கு அவர் எவ்வாறு தயாராகுகிறார் என்பதை ஒரு வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக “கூடிய விரைவில் வெள்ளித்திரையில் இந்த காவியத்தை காண தயாராகுங்கள்” என பதிவிட்டுள்ளார்.