நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில், டெத் ஓவரில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான சாதனைப் பட்டியலில் சுப்மன் கில் இணைந்துள்ளார்.
சுப்மன் கில்:
இந்திய அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை வென்ற பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருகிறது. நேற்று நடைபெற்ற, கடைசி டி20 போட்டியில் சுப்மன் கில் தனது முதல் டி20-க்கான சதத்தை அடித்து சாதனை படைத்திருந்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
டி20 போட்டியின் டெத் ஓவர் என்று கூறப்படும் கடைசி சில ஓவர்களில் மற்றும் 59 ரன்கள் விளாசி மேலும், ஒரு சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். அதாவது, டி20யின் டெத் ஓவர்களில் மட்டும் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களுக்கான பட்டியலில் சுப்மன் கில் 3 வது இடத்தை பிடித்துள்ளார்.
தோனி பாணியில் ஹர்திக் பாண்டியா…, வெற்றி கொண்டாட்டத்தில் நெகிழ்ந்த ரசிகர்கள்!!
இந்த பட்டியலில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி (63 ரன்கள்), நியூசிலாந்து அணிக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் (62 ரன்கள்) எடுத்ததன் மூலம் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். இவர்களை தொடர்ந்து, யுவராஜ் சிங் (58), சூர்யகுமார் யாதவ் (56) ரன்களுடன் 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ளனர்.