நடிகை தனுஷ் சிறுவயதில் அனுபவித்த கஷ்டங்கள் மற்றும் அவரது அண்ணன் செல்வராகவன் அவரை படுத்திய டார்ச்சர் குறித்த விவரங்களை, தனுஷின் சொந்த தங்கை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சொந்த தங்கை பேட்டி :
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது தனது வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் என்பதும், செல்வராகவனின் தம்பி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நடிகர் தனுஷின், தங்கையை பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மருத்துவத்துறையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் இவர், தனது சகோதரர்கள் குறித்த உண்மையை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது தனுஷ் சிறுவயதில், அவர் அண்ணன் செல்வராகவனுக்கு ரொம்ப பயப்படுவார். செல்வராகவன் எடுத்ததற்கெல்லாம் அவரை வந்து பேனை போடு, பிஸ்கட் பாக்கெட் எடுத்துட்டு வா என அவரை அடிக்கடி மிரட்டுவார். அவரும் சலிக்காமல் சொன்னதை எல்லாம் செய்வார்.
செல்வராகவன் செய்வதை எல்லாம் பார்த்தால் எனக்கே கடுப்பாக வரும். ஆனால் தனுஷ் அண்ணனுக்காக இதையெல்லாம் முகம் சுளிக்காமல் செய்வார். அந்த சின்ன வயசுல அவரது பொறுமை எங்களுக்கு ரொம்ப புடிக்கும் என சிறுவயதில் நடந்த முக்கியமான விஷயங்களை காமெடியாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.