Social Mediaவில் உலாவரும் மோசடி நபர்கள்.,, அதிரடி முடிவை கையில் எடுத்த சென்னை காவல்துறை!!

0
Social Mediaவில் உலாவரும் மோசடி நபர்கள்.,, அதிரடி முடிவை கையில் எடுத்த சென்னை காவல்துறை!!
Social Mediaவில் உலாவரும் மோசடி நபர்கள்.,, அதிரடி முடிவை கையில் எடுத்த சென்னை காவல்துறை!!

ஆண்ட்ராய்டு பயனர்கள் அண்மைக்காலமாக அதிகம் பண மோசடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி வருவதையடுத்து, இதை தடுக்கும் விதமாக சென்னை காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிரடி நடவடிக்கை:

கடந்த சில காலமாக சமூக வலைத்தளம், செயலிகள் வாயிலாக மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் பொய்யான தகவல்களை பரப்பி பொதுமக்களை பயத்திற்கு ஆளாக்கி அவர்களிடம் இருந்து பணத்தை பறிக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் வெளிநாடுகளில் அதிகமாக காணப்படும் இந்த வகை மோசடி, தற்போது இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் ஆன்லைன் மோசடி வழக்குகள் அதிகம் பதிவாகி வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

“வாரணம் ஆயிரம்” படத்தோட ஜெராக்ஸ் தான் நானும் என் அப்பாவும்.., புகழாரம் பாடிய கெளதம் மேனன்!!

இந்நிலையில் இந்த ஆன்லைன் பண மோசடி கும்பலை கையும் களவுமாக பிடிக்க சென்னை காவல்துறை முக்கிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அதாவது சோசியல் மீடியாவை கண்காணிக்க சென்னை காவல்துறையில் தனிப்பிரிவு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் காவல்துறை உதவி ஆணையர் தலைமையில் அமைக்கப்பட உள்ள இந்த தனிப்பிரிவு, சோசியல் மீடியாவில் பணமோசடியில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து, மோசடி நடக்கா வண்ணம் முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here