மினி ஏலத்துக்கு முன்னாடியே இப்படியா?? வீரர்களை தன் வசப்படுத்தும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!

0
மினி ஏலத்துக்கு முன்னாடியே இப்படியா?? வீரர்களை தன் வசப்படுத்தும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!
மினி ஏலத்துக்கு முன்னாடியே இப்படியா?? வீரர்களை தன் வசப்படுத்தும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்பே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது, நட்சத்திர வீரர்களை மற்ற அணிகளிடம் இருந்து கைப்பற்றி வருகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் 23ம் தேதி கொச்சியில் நடைபெற இருக்கிறது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் கவனம் முழுவதும் யார்யார் எந்த அணியில் இடம் பெற போகிறார்கள் என்ற ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். இந்த ஏலத்திற்கு முன்பாக, தங்கள் அணியில் தக்க வைத்துக் கொள்ள இருக்கும் வீரர்களின் பட்டியலை உறுதி செய்து, வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும், ட்ரேடிங் முறையானது, மற்ற அணியில் தங்களுக்கு வேண்டிய வீரர் இருக்கும் பட்சத்தில், நேரடியாக அந்த அணியின் சம்பந்தத்துடன் வாங்கி கொள்ளலாம். இந்த முறையை தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நன்கு பயன்படுத்தி வருகிறது. அதாவது, கடந்த தொடரில், டெல்லி அணிக்காக விளையாடிய ஷர்துல் தாக்கூரை 10.75 கோடிக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்: ஏர்பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்திய இந்திய வீரர்!!

இதனை போன்று, கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் (சாம்பியன்) அணியில் இருந்த லாக்கி ஃபெர்குசன் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரையும் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது என்பது குறிப்பிட்ட தக்கது. இதன் மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடுத்த சீசனை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற உறுதியுடன் இருந்து வருவதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here