நடிகர் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 67 படத்தின் வில்லன்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 67:
இந்திய சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக ஜொலிப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். மேலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இம்மாத இறுதிக்குள் இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைய உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தளபதி 67 படத்திற்கு தயாராகி வருகிறார்.
மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் 40 வயது கேங் ஸ்டராகவும், அவருக்கு இணையாக 6 வில்லன்கள் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. அந்த வகையில் கேஜிஎப் பட சஞ்சய் தத் மற்றும் நடிகர் பிரித்விராஜ் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இதுவரை தேர்வாகியுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது இந்த கூட்டணியில் நான்காவது வில்லனாக இயக்குனர் கெளதம் மேனன் இணைய இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படம் பான் இந்திய லெவலில் உருவாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் இப்படத்தில் ஐந்தாவது வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி இருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.