சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர், அருள் சரவணன் அண்ணாச்சி தளபதிக்கு போட்டியாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அண்ணாச்சி போட்டோ:
சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர், அருள் சரவணன் அண்மையில் தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். படத்தின் முடிவு எப்படி இருந்தாலும் சரி, என்னுடைய சினிமா ஆசைக்கு மட்டும் முடிவே கிடையாது என வெளிப்படையாக அறிவித்தார்.
இந்த நிலையில், வாரிசு பட ஷூட்டிங்கில் இருக்கும் தளபதி தனது சமீபத்திய லுக்குடன் ராஷ்மிகா மந்தனாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோ, இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்போது இந்த புகைப்படத்திற்கு, டஃப் கொடுக்கும் விதமாக சரவணன் அண்ணாச்சி தளபதி விஜய் போலவே ஹேர் ஸ்டைல் வைத்து தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த போட்டோ லெஜண்ட் ஷூட்டிங்கில் எடுத்தது எனவும் குறிப்பிட்டார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள், அடுத்த டார்கெட்டை தளபதிக்கு வைத்துள்ளீர்கள் போல? என நக்கலாக கிண்டல் செய்து வருகின்றனர்.