பேருக்கு ஏத்த மாதிரி சீரும்னு பார்த்தா.., ஊறுதே.., ஒர்க் அவுட் ஆகுமா? ‘கோப்ரா’ திரைவிமர்சனம்!

0

நடிகர் விக்ரம் அப்டினு சொல்றத விட சியான் விக்ரம் சொன்னா இன்னும் பவரு ஜாஸ்தி தான். விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான அப்பா பிள்ளை படமான மஹான் திரைபடம் நல்ல ஹிட் அடைந்ததை அடுத்து இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ பட ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் ஹைப்பை ஏற்படுத்தியது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் படியே விநாயகர் சதுர்த்தி நாளான இன்று (ஆகஸ்ட் 31) உலகமெங்கிலும் ‘கோப்ரா’ படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. இப்படி நடிகர் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ள கோப்ரா படம் தெளிவா இருக்கா? இல்லை மண்டையை போட்டுக் குழப்பியதா என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்.. கோப்ரா திரைப்படத்தின் பக்க பலமே நடிகர் விக்ரம் மட்டும் தானாம். அப்படி தேவைக்கு அதிகமான உழைப்பை செலுத்தி மாஸ் ஹீரோவாக நடித்துள்ளாராம்.

இவருக்கு ஜோடியாக நடித்துள்ள 3 ஹீரோயின்களில் ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் இல்லை என்றாலும் கதைக்கு எந்த பாதிப்பும் நேர்ந்திருக்காது என்பது உண்மை. ஆனால் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் அவருக்கு கொடுக்கப்பட்ட ரோலையும் தாண்டி அதிக உழைப்பை கொடுத்து பக்காவாக நடித்துள்ளார். அந்த வரிசையில் மிருனாளினி ரவி, ரோபோசங்கர், ஆனந்த்ராஜ், ரோஷன் மேத்யூ கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

படத்தின் முதல் பாதியை பொறுத்தவரை பல திருப்பங்களை கொண்டு மதி என்ற ரோலில் விக்ரம் அடி தூளாக நடித்துள்ளார். இவர் ஆடும் கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் இறுதி ட்விஸ்ட் என்ன? அவர் ஏன் பல கொலைகளை செய்கிறார்? அதற்கு பின்னல் இருக்கும் சதி என்ன? இதெல்லாம் தான் மொத்த கதையும். முக்கியமா ஏ.ஆர்.ரகுமான் இசை படத்துக்கு உயிரை கொடுக்கிறது. அதே சமயம் பாடல் ஏதும் அவ்ளோ சிறப்பு இல்லை. மொத்தத்தில் கோப்ரா படம் பேருக்கு ஏத்த மாதிரி சீறி பாயும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. சியானுக்காக ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம். ஓவர் ஆள் ரேட்டிங் 2.5 படத்தை பார்த்த ரசிகர்கள் கொடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here