அடடா.., அதிதிக்கு அடிச்ச லாட்டரியை பாருங்கள்.., இயக்குனர்கள் பொண்ணுனால இவளோ மவுசா??

0

சினி துறையை பொருத்தவரை திறமைக்கு மட்டுமே முதல் அங்கீகாரம் கிடைச்சிருக்கு. ஏதோ ஒரு சில சமயங்களில் திறமையை தாண்டி பல பாலிடிக்ஸ் இருந்தாலும், முன்னுரிமை என்பது திறமைக்கு மட்டுமே. அதுபோல சினிமாத்துறையை பின்னணியாக கொண்டிருக்கும் குடும்பத்தில் இருந்து வரும் வாரிசுகளுக்கும் வாய்ப்புகள் கிடைப்பது எளிது. ஆனால் அப்படி வந்த பலரில் சிலர் மட்டுமே தனக்கான இடத்தை தக்க வைத்து இன்னும் ரீச்சில் இருக்கின்றனர்.

அந்த வரிசையில் இப்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகள் அதிதி மீடியாவுக்கு முத்தையா இயக்கத்தில்,கார்த்திக் நடிப்பில் வெளியான விருமன் படம் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். அப்பா இயக்குனர் என்பதாலே இவருக்கு சின்ன வயசுல இருந்து நடிப்பில் அதிக ஆர்வம் இருந்ததாம். ஆனாலும் படிப்பு முக்கியம்னு அப்பா சொன்ன ஒரு காரணத்துக்காக டாக்டர் பட்டம் முடித்தாராம். இப்படி அப்பா ஆசையை நிறைவேத்துன பிறகு தான் மீடியா உள்ள வர அப்பாகிட்ட பெர்மிசன் கேட்டேன் என நிறைய இன்டெர்வியூல இதப்பத்தி பேசியிருக்காங்க.

இவர் நடித்த முதல் படமே அதிரி புதிரி ஹிட்டை அடித்துள்ளது. என்னதான் இயக்குனர் மகளா இருந்தாலும் அதிதி ரொம்ப எளிமையா இருக்குறதாலயும், க்யூட்டான துறுதுறு பேச்சும் ரசிகர்கள் பட்டாளத்தை குவித்துள்ளது. இப்படி இருக்கையில் இந்த படத்துக்காக அதிதி 25 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் முத படத்துலயே இவ்ளோ சம்பளம் கொஞ்சம் ஓவரு தான்..இதுல கூட பாலிடிக்ஸ் இருக்கு சங்கர் மகள் அப்டிங்குறதால தான் இவ்ளோ மவுசு அப்படினு நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனாலும் அதிதி ரசிகர்கள் இவருக்கான சம்பளம் ஒர்த் தான். இவரு நடிச்சது முதல் படமா இருந்தாலும், நடிப்புக்கு என்ன குறை இருக்கு. அதுமட்டுமில்லாம அவரு பாடுன ‘கஞ்சா பூ கண்ணால’ பாட்டு தான் படத்தையே தூக்கி விட்டுருக்கு என படத்தை பார்த்த சிலரும் அதிதி சங்கருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here