சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர், அருள் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள லெஜண்ட் படத்தில் சரவணன் நடிப்பை பார்ப்பதற்கு, சூப்பர் ஸ்டார் ரஜினி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் கொடுத்துள்ளார் .
சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி:
சரவணா ஸ்டோர்ஸ் கடையின், உரிமையாளர் அருள் சரவணன் தனது நீண்ட நாள் கனவான, ஹீரோ ஆசையை லெஜண்ட் படத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளார். இந்த படம் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
எத்தகைய எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், தனது நடிப்பை மட்டும் நிறுத்தப் போவதில்லை என்றும், தொடர்ந்து நடிப்பேன் என்றும் சரவணன் அண்ணாச்சி அண்மையில் தெரிவித்தார். சினிமாவில் தனக்கு சூப்பர் ஸ்டார் தான், முன்னுதாரணம் எனக் கூறி வரும் சரவணன் அண்ணாச்சிக்கு, நடிகர் ரஜினி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
அதாவது, லெஜண்ட் படம் ஷூட்டிங் நடந்த இடத்திற்கு சென்ற ரஜினி, சரவணனை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்த போட்டோக்கள், தற்போது வெளியாகி வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.