பிரபல நடிகரை காதலிக்கும் நடிகை எமி ஜாக்சன் – விரைவில் திருமணம் செய்ய அதிரடி பிளான்??

0
பிரபல நடிகரை காதலிக்கும் நடிகை எமி ஜாக்சன் - விரைவில் திருமணம் செய்ய அதிரடி பிளான்??
பிரபல நடிகரை காதலிக்கும் நடிகை எமி ஜாக்சன் - விரைவில் திருமணம் செய்ய அதிரடி பிளான்??

முன்னணி நடிகையான எமி ஜாக்சன், இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருவதாகவும், முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

நடிகருடன் காதல்:

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை எமி ஜாக்சன். இவர், பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் பனயூட்டுவை காதலித்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக பிரிந்தனர்.

இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சன் மீண்டும், இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலிப்பதாக பேசப்படுகிறது.  கடந்த டிசம்பர் மாதம் சவுதி அரேபியாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற போதிருந்து இருவரும் காதலித்து வருவதாக பேசப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும், இவரையாவது எமி ஜாக்சன் திருமணம் செய்து கொள்வாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here