பிரபல மலையாள நடிகர், விஜய் பாபு மீது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் மோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் அதிரடி:
மலையாள திரையுலகில் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான, சூரியன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் விஜய் பாபு. இந்த படத்தை, தொடர்ந்து அண்ட் த மங்கி பென், பெருச்சாழி, முத்துகவு, ஆடு 2 உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தும், நடித்தும் பிரபலம் ஆகியுள்ளார். இந்த நிலையில், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடிகருக்கு எதிராக அதிரடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதாவது, தனக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, பலமுறை அவர் தன்னை பலாத்காரம் செய்ததாக அவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, நடிகருக்கு எதிராக பாலியல் பலாத்காரம் மற்றும் உடல் உபாதைகளை விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்