விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி, நாளை (28-04-2022) ரிலீசாக உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் USA பிரீமியர் காட்சிகள், ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ரசிகர்கள் அதிர்ச்சி:
விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதியான நாளை ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் டீசர், ப்ரோமோ மற்றும் டிரைலர் உள்ளிட்ட அனைத்தும் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில், நாளை ரிலீசாக உள்ள இந்த படத்தின் USA பிரீமியர் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ரசிகர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திடீரென, காட்சிகள் ரத்து செய்யப்பட்டது ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தமிழகத்திலும் காட்சிகள் ரத்தாகுமா? என கேள்வி எழுந்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்